திருப்பூர்:கோல்டன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழா திருப்பூரில் உள்ள அருள்புரம் டி.ஆர். ஜி.அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கண்தான மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு உலக சாதனையாளரும், அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு திரைப்பட நடிகர் சதீஷ் மற்றும் விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா ஆகியோர்களால் சக்ஸஸ் அவார்ட் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
