தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கார் ஒட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம்
ஆர்.ஏ.புரம்:
தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில்
கார் ஒட்டுநர்கள், ஏழை எளியவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்பட பலருக்கு நிவாரண பொருட்கள் தொடர்ச்சியாக சமூக நோக்குடன் தமிழ்நாடு கார் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் ஜே.பி. செல்வம் அவர்களின் தலைமையில் ஆர்.ஏ.புரம் முதல் தெருவில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அதிமுக நிர்வாகி அடையாறு சீனிவாசன், வழக்கறிஞர் சௌமியா ஆகியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சி.வி.கே.சதீஷ், ஜெயக்குமார் ரவிக்குமார், சிவா, ரஜினி நாகராஜ், முருகன், ரமேஷ் விஜயகுமார் மற்றும் மகேந்திரன் உள்பட பலர் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
நேற்று சுமார் 150 ஏழை ,எளிய குடும்பங்கள் மற்றும் ஓட்டுநர் குடும்பங்களுக்கும் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
