சென்னை :உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கோரோனா வைரஸ் தொற்றை நாம் அனைவரும் ஊரடங்கின் மூலம் எதிர்த்து வருகிறோம். மருத்துவர்கள், சுதாதார பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், அரசு பணியாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடக துறையினர் என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தான் கடவுளாக பார்க்கப்படுவர்கள் என சமீபத்தில் மாண்புமிகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட குறிப்பிட்டிருந்தார்.

இந்த வரிசையில் ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிற ஏழை எளிய குடும்பங்களின் பசியை போக்கி வரும் தன்னார்வலர்ளும் அடக்கம் என மதுரையை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த ஊரடங்கு உயிர் காக்கும் ஊரடங்காகும் இந்த ஆட்கொள்ளி வைரஸ் மருத்துவர்கள், காவலர்கள்,செய்தியாளர்கள் , தன்னார்வலர்கள் எவரையும் விட்டுவைக்கவில்லை.

அரசு அனுமதியோடு சமூகசேவை செய்தாலும். தகுந்த தற்காப்புடன் பணிபுரிந்தாலும் எந்த நோய் தொற்றுக்கும் நாம் காரணம் ஆகி விடகூடாது.சமூக விலகலை பின்பற்றி எப்படி நிவாரண பொருட்களை உரியவர்களிடம் சேர்க்க முடியுமோ சேர்க்க வேண்டும்.

உதவ வேண்டும் என நினைக்கும் நமது எண்ணமே அவர்களிடம் எப்படி சேர்க்கலாம் என் புதிய யோசனையினையும் உருவாக்கும்.வருகிற இக்கட்டான நாட்களில் களப்பணிகள் இன்னும் கடுமையானதாகவே இருக்கும். சுயபாதுகாப்போடு பணியாற்றுங்கள்”

மனிதநேயம் ஓர் அற்புதமான முதலீடு…விதைத்தால் பலமடங்கு நமக்கே பயன்படும்.எதை விதைக்கிறோமோ
அதையே அறுப்போம்.

இக்கட்டான இந்த சூழலில் நோயில் சிலர்,பசியில் சிலர் என
தினமும் நம்மைவிட்டு பிரிந்தும், கடந்தும் செல்கின்றனர்.

நம் உயிரை காக்க இன்னுயிரை நீத்த மருத்துவரின் உடலை
அடக்கம் செய்யகூட
மனிதநேயம் மறுத்துபோன மனிதர்கள் சிலர் இந்த சூழ்நிலையிலும் மனிதாபிமானம் இன்றி எதிர்கின்றனர்.

மனித குலத்தில் இறுதி பக்கத்தையாவது
மனிதத்தால் எழுதிக் கொள்வோமே? மனிதம் ஒன்றே தீர்வாகும் என சோஷியல் புரொடக்ஷன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.