உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு தினத்தை முன்னிட்டு லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் விருது வழங்கும் விழா!

சென்னை:உலகத்தமிழ் கலை மற்றும் பண்பாட்டு
தினத்தை முன்னிட்டு லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் விருது வழங்கும் விழா இதன் நிறுவன தலைவர் பாரத சிக்க்ஷா ரத்னா முனைவரும், பேராசிரியருமான எம்.ரஜினி அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார் விடுதியில் சிறப்புற நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நமது தமிழில் உள்ள ஆயக்கலைகளான 64 கலைகளின் புதிய திறமைகளை அழகாக வெளிப்படுத்தியமைக்காக சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்க் கலைகளை அர்ப்பணிப்புடன் ஊக்குவித்து வரும் முனைவர் ஜி.கே.கண்ணன், (ஏடிசி), ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், டயமண்ட் பாபு (பி.ஆர்.ஓ), கொத்தமாசு சத்தியநாராயணா, நாளைய சிகரம் ராமன், ஒரத்தநாடு கோபு, பக்தி சரண், விருகை வெங்கட் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து க்கொண்டு சிறப்பித்தனர்.

முனைவர் ரஜினி அவர்கள் தனது சிறப்புரையில் கூறியதாவது:
அடுத்த தலைமுறையினருக்கு கல்வியே அடையாளம், எனவே இதுபோன்ற தமிழ் கலை கலாச்சார நாளை பின்பற்றுவதன் மூலம் தமிழ் கலைகளை மக்கள் பாதுகாத்து வளர்க்க வேண்டியது அவசியம் என்றும், “எங்கே லக்ஷ்யம் இருக்கிறதோ அங்கே ஏற்றம்” “எங்கே அலட்சியம் இருக்கிறதோ அங்கே ஏமாற்றம்” இருக்கிறது. ஒரு முழுமையான வளர்ச்சி என்பது கல்வியில் மட்டுமல்ல, இணை பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்ட செயல்பாடுகளும் முக்கியமானவை. அனைத்து இயல், இசை, நாடகம் வாழ்க்கையின் ஒரு அங்கம். நடனங்களையும் விளையாட்டுகளாக உள்ளடக்கிய ஒலிம்பிக் நடன விளையாட்டு அறிமுகபடுத்தி உள்ளது சிறப்பு அதிலும் ஒலிம்பிக்ஸ் தென் இந்திய நடன விளையாட்டு துறையின் தலைவராக ரஜினி அவர்கள் உள்ளார். எனவே, இளையவர்கள் இந்தியாவுக்காக அதிக தங்கப் பதக்கங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பாடத்திட்டத்திற்கு அப்பால், எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கும், நமது தேசத்தை வலுப்படுத்துவதற்கும் மாணவர்கள் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன என்றும் தெரிவித்தார்.

இறுதியில் முனைவர் ரஜினி அவர்களின் பிறந்த தினத்தை போற்றும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதில் ஆசிரியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மகிழ்வித்தனர்.