ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னம் அறிமுகம்!
சென்னை : மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7-வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிக்கான பொம்மன் இலச்சினையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் “பாஸ் தி பால் (Pass The Ball)” நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திலீப்டர்க்கி, செயலாளர் போலோ நாத் சிங் ,பொருளாளர் சேகர் மனோகாரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட முண்ணனி ஹாக்கி வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

.
