சென்னை:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களை சங்கத்தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நிலுவையிலுள்ள மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.இதை கனிவுடன் கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விடுப்பு நாள்(EL) சம்பளம் தவணை முறையில் தருவதற்கு ஒப்புதல் அளித்து உறுதியளித்தார்கள். இதர கோரிக்கைகளையும் பரிசீலித்து ஆவணம் செய்வதாக கூறினார்கள். இந்த பேச்சு வார்த்தையின் போது சங்க பொதுச்செயலாளர் மு. வ. அய்யப்பன், தோழர். ஜி. ஜெயபால் மற்றும் பி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சங்கத்தின் சார்பாக அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.