கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு
பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்
எஸ். ராஜலட்சுமி அவர்கள் தலைமையிலும், முத்து அவர்கள் முன்னிலையிலும் கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. விடுதி கூட்ட அரங்கில் சிறப்புற நடைபெற்றது. தனச்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இதன் மாநில தலைவர் மனித நேயர் நா.சு.செல்வராஜ்
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:
இன்னமும் பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் பணி கிடைக்காத. R. C. H. தூய்மை பணியாளர்கள் 1200 பேருக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் பணியினை வழங்கிட வேண்டும்,
தமிழகம் முழுவதும் சுகாதார துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்
(நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட) பணிபுரியும் பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் அனைவருக்கும் உயர்ந்த பட்ச ஊதியத்தை சமமாக வழங்கிட வேண்டும்,
இப் பணியாளர்களுக்கு அரசு அடையாள அட்டை,சீருடை, பணி பாதுகாப்பு, வார ஓய்வு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு, ஆகியனவற்றை வழங்கிட வேண்டும்,
இப்பணியாளர்களுக்கு சேமநல நிதி பிடித்தல். பணிப் பதிவேடு துவங்குதல் வேண்டும்,
சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள் அறிவித்த (ஆணைப்படி) இவர்களின் பணிகளை வரையறை செய்யவேண்டும்,
இப்பணியாளர்களில் 60 வயது முடிந்தும் பணியில் இருப்பவர்கள் பணியை விட்டு நின்று போனவர் களுக்கும். மாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்கள் அறிவித்தது போல பணிக்கொடை வழங்கிட வேண்டும், கொரோனா
பணிக்காலத்தில் பணிபுரிந்து இன்னமும் ஊக்க ஊதியம் ரூ15.000/ கிடைக்காத 459 பணியாளர் களுக்கும் உடனடியாக ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், எதிர் வரும் 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ள இச்சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டத்தில் R. C. H. தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
