நாமக்கல்:
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முற்றிலுமாக செயல் இழந்துள்ளது.

எனவே ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கான கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டி தமிழக அரசு கல்வித்துறையை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் 25 % இலவச கட்டாய கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் செயல்படவில்லை என குற்றச்சாட்டுடன் இணையதளம் விரைந்து செயல்பட வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியினர் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் (CEO) மனு அளித்தனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கையானது விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வருகிற மே 20-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய தங்களுடைய குழந்தைகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்காண இணையதளமானது rte.tnschools.gov.in என்ற இணையதளம் முற்றிலுமாக செயல்படவில்லை.
இதனால் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் RTE- ல் மாணவர் சேர்க்கை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு ஏழை ,எளிய பொதுமக்கள் தவித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர். த .குமரவேல் அவர்கள் தலைமையில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் 25 % இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த இணையதளம் தற்போது முற்றிலுமாக செயல்படவில்லை என்பதால் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் மிகவும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 20- ம் தேதி என்பதால் தமிழ்நாடு அரசு மற்றும் மாநில கல்வித்துறையானது விரைந்து நடவடிக்கை எடுத்து செயல்படாமல் இருக்கும் இணையதளத்தை சரி செய்ய வேண்டி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளரும்,வழக்கறிஞருமான டாக்டர்.த.குமரவேல் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.