காட்டங்கொளத்தூர்: எஸ்ஆர்ஆம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் (தன்னாட்சி நிறுவனம்)
2026 ஆம் ஆண்டு விளையாட்டு சாதனையாளர் தின கொண்டாட்டம் நிகழ்வு காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாக புதிய கருத்தரங்கு அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

இதில் மாணவர் விளையாட்டு சாதனையாளர்களின் சிறந்த சாதனைகளை பாராட்டினர்.

இந்நிகழ்வில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் ந. கணபதி அவர்கள் 2025-26 ஆம் ஆண்டின் விளையாட்டு அறிக்கையை வழங்கினார்.

தேசிய வாலிபால் வீராங்கனையும்,
மறைமலை நகர்
கிளை மேலாளரும் பெடரல் வங்கியின் தலைவருமான எஸ். வைஷ்ணவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தாளாளர் செல்வி. ஹரிணி ரவி அவர்கள்
நிகழ்ச்சியை தலைமை தாங்கி விளையாட்டு சாதனையாளர்களை வாழ்த்தி பேசினார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்
விளையாட்டு இயக்குநர் முனைவர் ஆர். மோகனகிருஷ்ணன் அவர்கள்
கௌரவ விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர் ஆர். வெங்கடேஷ் பாபு, இயக்குநர் (நிர்வாகம் மற்றும் கல்வி) எஸ் ஆர் எம் குழுமம், முனைவர் பி. சிதம்பரராஜன், இயக்குநர், எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி முனைவர் எம். முருகன், முதல்வர், எஸ் ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி மற்றும் முனைவர் எஸ். விசாலாட்சி துணை முதல்வர், எஸ் ஆர் எம் வள்ளியம்மை ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, சர்வதேச தேசிய மற்றும் மாநில அளவிலான சாதனையாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.