காட்டாங்கொளத்தூர்:
எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் (ISTE) – ஆசிரியர் மற்றும் மாணவர் கிளை,
இந்திய பொறியாளர்கள் நிறுவனம் (IEI) – VEC மாணவர் கிளை, மற்றும்
AICTE IDEA Lab ஆகியவற்றின் இணைப்பில்,
நான்காவது தேசிய அளவிலான மாணவர்கள் தொழில்நுட்ப கருத்தரங்கம் (CRONUS’26) கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநர் முனைவர் B. சிதம்பரராஜன், முதல்வர் முனைவர் M. முருகன், துணை முதல்வர் முனைவர் S. விசாலாட்சி ஆகியோரின் வழிகாட்டுதலிலும் தலைமைத்துவத்திலும் நடைபெற்றது.
அவர்களின் தொடர்ந்த ஊக்கமும் தொலைநோக்கு பார்வையும் நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை தலைவர் முனைவர் S. பாக்கியலட்சுமி மற்றும் கட்டிடவியல் பொறியியல் துறை தலைவர் முனைவர் D. இளங்கோ அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக,செங்கல்பட்டு இணை வேளாண் இயக்குநர் அலுவலகத்தின்தகவல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு உதவி வேளாண் இயக்குநர் திரு. L. சரவணன் அவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
அவர் தனது துவக்க உரையில், வேளாண் பொறியியல் துறையின்
தற்போதைய வளர்ச்சி நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
குறிப்பாக வேளாண் இயந்திரங்களின் வளர்ந்துவரும் முக்கியத்துவம், வேளாண் விளைபொருட்களில் மதிப்பூட்டல் மற்றும் நிலைத்த வேளாண் வளர்ச்சிக்கான இயற்கை விவசாயத்தின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களின் தொழில்நுட்ப திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனைகளை வெளிப்படுத்தினர். சிறந்த மாணவர்கள் பாராட்டப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. CRONUS’26 நிகழ்ச்சி இளம் மாணவர்கள் அறிவு பரிமாற்றம் செய்ய, புதுமைகளை உருவாக்க, மற்றும் வேளாண் பொறியியல் துறையில் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்த உதவும்
சிறந்த மேடையாக அமைந்தது.
