சென்னை : ஜூலை,20 சென்னை மந்தைவெளியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் முறையே 490 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றவர்கள் 11 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 156 பேரும்,470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 669 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் பேரும் 1576 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 3204 பேரும் அடங்குவர்.

இப்பள்ளியின் முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள் 494, 493, 493, 491, 490 வீதம்
மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் முதல் தரம் பெற்ற மாணவர்கள் 2638, அறிவியலில் முதல் தரம் பெற்ற மாணவர்கள் 2318, மொத்த மதிப்பெண்களில் முதல் தரம் பெற்ற மாணவர்கள் 12671, அனைத்து ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்களும் முழு தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அளவில் தொடர்ந்து 2ஆம் ஆண்டாக நூறு சதவீதம் முழு தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளியின் முதன்மை செயல் அதிகாரி சுனில் மற்றும் துணை செயல் அதிகாரி ஹரிபாபு ஆகியோர் தெரிவித்தனர்.

ஸ்ரீ சைதன்யா கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி.எஸ்.ராவ் இந்த மாபெரும் வெற்றியையொட்டி
மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
