சென்னை: ஜுலை, 20
.கறுப்பர் கூட்டம் என்கிற ஒரு யு ட்யூப் சேனலில் இந்து கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியது இதனால் இந்துக்கள் மனம் கொதிக்கிறது. இது யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.கருப்பர் கூட்டத்தை கைது செய்த உடன் எதிர் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை விடுதலை செய்ய அறிக்கை விடுக்கிறார் மறுநாள் ஆ.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம்
அவர்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது தமிழகத்தில் 95% பேர் திமுகவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். அப்படி இருக்கையில் திமுக ஏன் இந்துவை மட்டும் குறி வைத்து தாக்குகிறது. இதுவரை கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலின் அவர்கள்
இந்துக்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காரணத்தினாலும் இந்துக்கள் ஓட்டு கிடைக்காது,இந்துக்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள் என்ற பயத்தாலும் இப்போது கோவிலை சேதபடுத்தியதற்கு ஒரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இனிமேல் இந்து சமயத்தையோ, இந்துகளையோ யாராவது தவறாக பேசினாலோ கோவில்களை அவமதித்தாலோ இந்துக்கள் நாங்கள் யாரும் சும்மா விடமாட்டோம் தக்க பதிலடி கொடுப்போம் இவ்வாறு அவர் பேட்டியில் சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்…
