சென்னை :
எஸ்.ஆர்.எப். மற்றும் எஸ்.ஆர்.எப். பாலிமர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மணலி எஸ்.ஆர்.எப் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், சட்டவிரோதமாக தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்ததை திரும்பப்பெற கோரியும், தொழிலாளர்களுக்கு 3 மாத காலமாக ஊதியம் வழங்காமல் இருக்கும் ஊதியத்தை நீதிமன்ற உத்தரவை மதித்து வழங்கக் கோரியும், ஆலையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை சரிசெய்ய கோரியும், 01.04.2020 முதல் உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எஸ்.ஆர்.எப். மற்றும் எஸ்.ஆர்.எப். பாலிமர் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத் தலைவர் தோழர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.மேலும் இதில்
சங்கத்தின் துணைத் தலைவர்தோழர் ம. சி.சுதேஷ் குமார்,சங்க பொதுச் செயலாளர் தோழர் பி.ஆர்.சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு கண்டன உரை ஆற்றினர்.மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணலி தொழிற்சங்க கூட்டமைப்பின் கெளரவ தலைவர் செங்கை தாமஸ்,மணலி தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் கண்ணன்,பொதுச் செயலாளர் வைத்தியலிங்கம், டி..பி.எல். சங்கத்தின் தலைவர் அன்பு ராஜாராமன், இடது தொழிற்சங்க மையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமார் வட சென்னை சி.ஐ.டி யு பொது தொழிலாளர் சங்க தலைவர் கோத்தாரி சங்கத்தின் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்…(எஸ்.ஏ.ராஜ்குமார்செய்தியாளர்96 77 34 91 96 )