சென்னை.சமூக பாதுகாப்பு அமைப்பு (சோஷியல் புரோடக்ஷன்) சார்பில்
உலக மனித உரிமைகள் தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருதுகள் வழங்கும் விழாசமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சென்னையிலுள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.

இந்த அமைப்பின் பொது செயலாளர் கார்த்திக்குமார், கமிட்டி தலைவர் மா.கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற இவ் விழாவில்,ஜப்பான் நாட்டைசேர்ந்த UPF நிறுவன நிர்வாகி சிசிகோ ஓனிடெரோ சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் ரைசிங் ஸ்டார், சிறந்த சாதனையாளர். குளோபல் ஐகான், வாழ்நாள் சாதனையாளர், அம்பாசிடர் உள்ளிட்ட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் மனித உரிமைகள் குறித்த உரைகள் காணொளி மூலம் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள், செய்தியாளர்கள், யோகா கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் சமூக விழிப்புணர்வு ஆவண படம் குறித்த விவாதத்தை உயர்நீதி வழக்கறிஞர் யுவராஜ் அவர்கள் நெறியாள்கை செய்தார்.
பலகுரல் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அமைப்பின் இணை இயக்குனர் ஸ்டீபன் சீனிவாசன் நன்றியுரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வு சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் விழிபுணர்வோடு நடைபெற்றது.
