சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் கந்தேஸ்வரி ஆகியோரின் புதல்வி தேஜஸ்வினி என்பவர் ஸ்ரீ பக்தவச்சலம் வித்யாஷ்ராம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் உலக கின்னஸ் சாதனை முயற்சியாக (3*3 Cube), ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இன்ஜுனியஸ் சார்ம் வேர்ல்ட் ரெக்கார்டுஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் சாதனைகள் பல நிகழ்த்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் இவர் கடந்த செப்டம்பர் 8, 2022 அன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் சாதனையாளர் அங்கீகாரம் உறுதிசெய்யப்பட்டது.
மேலும் இவரின்
பாம்பு கனசதுரம், பிரமிக்ஸ் கனசதுரம் மற்றும் ஸ்கியூப் கனசதுரம் உள்ளிட்டவைகளில் ஒரு நிமிடத்தில் கனசதுரங்களை தீர்த்துக் கொண்டே பல்வேறு நாடுகளின் கொடிகளை அடையாளம் கண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் அவர் ஹுலா ஹூப்பை (Hulahoop) இடுப்பில் சுற்றுவதுடன், பல்வேறு வகையான கனசதுரங்களை (Rubik’s Cube) தீர்க்கவும் ஒரே நேரத்தில் திருக்குறள்களை சொல்லும் திறனையும் வளர்த்துக்கொண்டார்.

இது மட்டுமில்லாமல் ரூபிக்ஸ் கியூப்ஸ் (Mosaic Art) பயன்படுத்தி எந்த உருவப் படத்தையும் செய்து காட்டும் அசாத்திய திறனை வளர்த்து கொண்டதுடன் பாம்பு கனசதுரம். 22 கனசதுரம் ,33,
பிரமிட் கனசதுரம், ஸ்கூப் கனசதுரம், மெகாமின்க்ஸ் கனசதுரம் உள்ளிட்ட பல்வேறு விதமான கனசதுரங்களை தீர்த்துள்ளார்.

இந்த அசாத்திய சிறுமியின் சாதனைகளை இனம்கண்ட தமிழ்நாடு கன சதுர சங்கம் அவரின் சாதனைகளை போற்றும் வகையில் இவரின் பயிற்சியாளர் ஆனந்த் அவர்களின் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.