சென்னை: கொரோனா நேரத்தில் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம் என அனைத்தும் செயல்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் வட்டிகேட்டு நெருக்கடி தருவதாக சிறகுகள் அனைத்து ஓட்டுநர்கள் மாநில தலைவர் சபரிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இந்த கொரோனா ஊரடங்கில் மிகவும் பாதிப்படைந்து எங்கள் ஓட்டுநர் தொழில்தான். சுத்தமாக வருமானம் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் மெத்தன போக்கைதான் காட்டுகிறார்கள் என்று கூறினார்.
எங்களின் சரக்கு வாகனம், சுற்றுலா வாகனம் என அனைத்தும் ஆங்காங்கே நிற்கிறது எனவே அரசு தங்களுக்கு பேரிடர் இழப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தனியார் நிறுவனங்கள் EMI கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள் எனவும்,அரசு ஓடாத வண்டிக்கு tax கட்ட சொல்லுகிறார்கள் எனவே தங்களுக்கு கூறிய பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் EMI வட்டி விகிதம் போன்றவற்றினை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். ஒரு சில தளர்வுகள் அளித்து பிற மாவட்டங்களில் எங்கள் வாகனம் இப்பொழுதுதான் இயங்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் பணத்திற்கு நாங்கள் எங்கே செல்வோம் என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் வாகன F.C.க்கு 6 மாத கால அவகாசம் தேவைப்படும் என்றும்.ஏற்கனவே பிச்சை எடுக்கும் போராட்டங்கள் நடத்தி விட்டோம் ஆனால் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை எனவும்
இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
