நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் போக்கை கண்டித்தும்,  வழக்குப்பதிவு செய்து வன்கொடுமை நிகழ்த்திய நபர்களை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையின் செயல்பாட்டினை கண்டித்தும், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் சட்டத்திற்கு புறம்பான மது விற்பனையை  தடுக்ககோரியும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், கலங்காணி பகுதியைச் சார்ந்த பாலு என்பவர் வன்கொடுமை சம்பந்தமாக புகார் மனு கொடுத்து சுமார் 45 நாட்கள் கடந்தும் இதுவரை எந்தவிதமான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காத புதுச்சத்திரம் காவல்  ஆய்வாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 (திருத்த விதிகள் 2016) பிரிவு 4-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில்  நாமக்கல் மாவட்ட செயலாளர் தோழர். முனைவர் த. குமரவேல் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பரமத்தி வேலூர் மாவட்ட செயலாளர் தோழர். மாதேஸ்வரன் மற்றும் குமாரபாளையம் தொகுதி  மாவட்ட செயலாளர் தோழர்.அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்  தோழர். செல்வவில்லாளன், மாநில துணை இளம்புலிகள் அணி செயலாளர் தோழர். அறிவுத்தமிழன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  தோழர்.கார்த்திக் மாநில மாணவரணி அமைப்பு செயலாளர் தோழர். கவிவள்ளுவன், மண்டல செயலாளர் தோழர். உதயபிரகாஷ், மண்டல துணை செயலாளர் தோழர்.சிவசங்கர் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். 

ஒன்றிய செயலாளர் தோழர்.தட்சணாமூர்த்தி அவர்கள் நன்றியுரை நல்கினார். 

மேலும் இதில் நாமக்கல் தொகுதி மாவட்ட அணி செயலாளர் தோழர்.குமார், மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.