சென்னை: மகாத்மா காந்திக்கு எதிராக செயல்பட்ட வி.தா சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்குவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்பதனை கண்டித்து
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் இதன் தலைவர் வழக்கறிஞர் எம். எல்.ரவி அவர்கள் தலைமையிலும்,
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர். முனைவர் தி.சிவஞானசம்பந்தன் அவர்கள் ஏற்பாட்டிலும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம். எல். ரவி அவர்கள் 28.5.2025 அன்று கும்பகோணத்தில் அகில பாரத மகா சபை தலைவர் பாலசுப்பிரமணியன் பத்திரிகையாளர்களிடம் வி. தா. சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும், அவருடைய உருவ படம் ரூபாய் நோட்டில் வரவேண்டும். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் மத்திய, மாநில அரசுகள் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் இருந்த அமைப்பினர் மகாத்மா காந்தியை கொல்வதற்கு நான்கு முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். ஐந்தாவது முறையாக கொல்லப்பட்டார். அப்போது கடந்த சிலமாதங்களாக தேசத்தில் தலைவிரித்து ஆடும் பலவித தீய சக்திகளின் விளைவே அது என்றும், மிகவும் நல்லவராக இருப்பது மிக ஆபத்து என்றும் சுட்டுக்கொல்லப்பட்ட உடன் நேரு கூறினார்.

பெர்னாட்ஷா, பெரியார் ஆகியோர் மகாத்மா காந்திஜி மறைவிற்குப் பிறகு இந்த நாட்டுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.
மகாத்மா காந்திஜி கொலை வழக்கில் நான்காவது எதிரியாக வி. தா. சாவர்க்கர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டவர். அவர் ஆர்.எஸ் எஸ் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர் அப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா வழங்க கோருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர். தனசேகரன், பொது செயலாளர் வழக்கறிஞர் ஆர். சேர்மா செல்வராஜ்,
வழக்கறிஞர். எ. கௌதமன், வழக்கறிஞர் ஆர்த்தி சிதம்பரம், கவிஞர் ஞானி, ஏ. ஐ.டி.யு.சி சடையப்பன், பத்து ரூபாய் இயக்க நிர்வாகிகள் பாஸ்கர், கண்ணன் சசி பெருமாள் மது ஒழிப்பு போராளி சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

