சென்னை: சைதாப்பேட்டை சலவையாளர் காலனி முதல் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் மற்றும் ஶ்ரீ எல்லையம்மன் ஆலய புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மூலவா் சன்னதி மேலுள்ள கோபுரத்தில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு விதமான அபிஷேக நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மேலும் இந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை தலையில் தெளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இதில் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.