பெரம்பூர்:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக வெப்பமயமாவதலை குறைப்பதற்காக பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் பீமாமுங்கில் மரக்கன்றுகள்
நடும் நிகழ்ச்சி சிறப்புற நடைப்பெற்றது.

இக்களப்பணி பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் முதன்மை பணிமனை மேலாளர் கே. வி. சுந்தரேசன் அவர்களின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவர் பீமா மூங்கில் மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சி துணை தலைமை வணிக மேலாளர்
டி. சொப்னா அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை நாயகன் உமாநாத் மற்றும் மூத்த பிரிவு பொறியாளர் (ஓய்வு) லயன் டி. கணேஷ் காந்த் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சொப்னா அவர்கள் பேசிய போது: பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க கார்பன் நியூட்ரல் தொழிற்சாலை ஏற்படுத்த தொடர்ந்து பல ஆயிரம் பீமா மூங்கில் மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


