அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா !
பூவலை:திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், ஆரம்பாக்கத்தை அடுத்த பூவலை கிராமத்தில், மாந்தோப்பின் நடுவே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூஜை எல்லையம்மன் திருக்கோவிலின் 11 ஆண்டு உற்சவ திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், சிறப்பு வழிபாடு, அன்னதானம் மற்றும் விளக்கு பூஜை உள்ளிட்டவைகள் ஆலய நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது.


இவ்விழாவில் ஆலய நிர்வாகிகள், உபயதாரர்கள்,ஏ.கே.பி நிர்வாகிகள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.








