எழும்பூர்:
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகம்
அனைத்து ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் என்கிற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும்
பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரியும் பெருந்திறள் கண்டன ஆர்ப்பாட்டம்
இச்சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் கு.பாரதி அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூரிலுள்ள
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் எதிரில் நடைப்பெற்றது.
மாநில தலைவர் வி. முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயல் தலைவர் தங்கவேல்,
மாநில பொதுச்செயலாளர்
கே. குமார்,
மாநில பொருளாளர்
கே. ராமகிருஷ்ணன்,
மாநில செயலாளர், வழக்கறிஞர்
ஜே. மோகன்ராஜ்
மாநில முதன்மை ஆலோசகர்
என். ஜேம்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
20 ஆண்டுகாலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் பணியாளர்களின் மீது தன்னிச்சையாக ஒருதலைபட்சமாக சுற்றறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்,இருபது ஆண்டு காலமாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தற்காலிகமாக பணி செய்யும் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்டன.

மேலும் இதில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ராஜசேகர், செயலாளர் பார்த்திபன், பொருளாலர் முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகளான அசோக் ,பாஸ்கர்,சரவணன்,சுந்தரமூர்த்தி மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திறளாக கலந்துக்கொண்டனர்.

