திருகோவிலூர்:
தமிழக வளர்ச்சி கழகத்தின் சார்பில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் கழகப் பொருளாளர் த.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்படடது.

மேலும் இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோ.அய்யாகண்ணு, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெ.வேணுகோபால், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வ கணபதி, மாநில விவசாய அணி தலைவர் த.உத்திரகுமார், திருக்கோவிலூர் நகர இளைஞரணி செயலாளர் வீ.ஆகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.