குரோம்பேட்டை:டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சென்னை குரோம்பேட்டையில் உள்ள அம்பேத்கர் அகாடமியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலம் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலர் முனைவர் நாகூர் கனி அவர்களின் பல்வேறு சமூக பணிகளை நினைவு கூர்ந்து அவரை வாழ்த்தி பேசினர்
குறிப்பாக உயர் கல்வி துறையில் கல்லூரி கல்விப் பணியில் உள்ள SC/ST Backlog காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து 526 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 2008 ஆம் ஆண்டு நிரப்புவதற்கு அடிகோலியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(முனைவர் நாகூர் கனி அவர்கள் பணி நிறைவு பெற்றாலும் அவரின் சமுதாய பணி மேன்மேலும் தொடர யுகம் நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்)

