புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

நுங்கம்பாக்கம்:
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு விலுள்ள அலுவலக வளாகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் நிர்வாக அலுவலர் சுதா சுகுமார் அவர்களின் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் அறங்காவலர்களான சுரேந்திரன் மற்றும் துரைராஜ் உள்ளிட்ட அறக்கட்டளை உறுப்பினர்களான சீனிவாசன், செந்தில்அருள்,ரவிக்குமார், சஞ்சய் சேகர், விமல், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேலும் இந்நிகழ்வில் நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சுமார் 150க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



