சூளை:முன்னால் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் மாவட்ட தலைவர் பா.ராஜலஷ்மி அவர்கள் தலைமையில் சூளையில் உள்ள இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் நலிவுற்ற மற்றும் முதியவர்களுக்கு இனிப்புகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டது.

இதில் எஸ்.சி .துறை மாநில துணை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், சர்க்கிள் தலைவர்கள், வட்ட தலைவர்கள், மற்ற அணி நிர்வாகிகள் திறக்க கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

