சென்னை :ஏப்ரல், 17,2020

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் மனநல ஆலோசகர், சமூக சேவகி, என பல பன்முகங்கள் கொண்ட பத்மபிரியா அவர்கள் குடும்ப நல ஆலோசனை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். பெண் என்பவள் சமுதாயத்திலும், குடும்பத்திலும் ஜெயிப்பதே உண்மையான அங்கீகாரம் என எல்லா தளத்திலும் எப்போதும் பதிவு செய்வார்.

முதன்முதலாக டெல்லி முதல்வர் பங்குபெற்ற நிகழ்வில் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா அவர்களின் கரங்களில் தேசிய விருதும் பெற்றுள்ளார்.அதன் பின்பு தங்கமகள், சர்வதேச விருதுகள் என 200 க்கும் மேற்பட்ட அங்கீகாரங்கள் பெற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகள் , பத்திரிகைகளின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

மைண்ட் டீரி என்ற தொண்டு நிறுவனத்தை அரம்பித்து பல்வேறு ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் பல செய்து வருகிறார், சுய முன்னேற்ற பயிற்சியாளராக உள்ள வழக்கறிஞர் பத்மபிரியா அவர்கள் 100க்கும் மேற்பட்ட பயிற்சி கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு முகாம்கள், பலவற்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி வருகிறார்.

பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறார்.சமீபத்தில் சென்னை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைகழகத்தில் இவர் நடத்திய மருத்துவத்துறை சார்ந்த உலக சாதனை அதிகமான வரவேற்பை பெற்றது .
ஐக்கிய நாடுகள் சபையில் சபையில் அங்கம் வகிக்கும் UPF இவரை சிறந்த தம்பதிகள் என பாராட்டியுள்ளது. இவர் கௌரவ டாக்டர் பட்டம், சர்வதேச குடும்ப அமைதிக்கான தூதர் உள்ளிட்ட அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.

பலரது வாழ்வில் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் வழக்கறிஞர் பத்மபிரியா அவர்களை யுகம் நியூஸ் சார்பில் வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.