சென்னை: ஏப்ரல், 18, 2020 தங்களது கனவுகளை மெய்பட வைக்க இந்த உலகில் பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் கனவு மெய்பட அறக்கட்டளையில் நிறுவன தலைவர் முனைவர். தினேஷ் ஜெயபாலன் என்ற சமூக சேவகர் பிறர் கனவை மெய்பட வைக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றார்.14 ஆண்டுகள் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிந்த வந்த இவர் , தற்போது அடுமனை தொழில் செய்து வருகிறார். இவர் கனவு மெய்பட அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தைத் கடந்த 2018, ஜனவரி, 24 முதல் தனது நண்பர்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறார் .அறக்கட்டளை ஆரம்பிக்கும் முன்பே சமூக பணியில் இவர் 9 ஆண்டுகளாக ஈடுப்பட்டு வந்தவர். இந்த அமைப்பின் மூலம் கல்வி மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி பல நற்பணிகள் செய்து வருகிறார்.12 லட்சம் ரூபாய் வரை பல ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தியிருக்கிறார். முதன் முதலாக ஒரு மாணவிக்கு 5 மணி நேரத்திற்குள் 36,000 ரூபாய் கட்டியது தான் இவரை அர்பணிப்போடு மேலும் பல நற்பணிகள் செய்ய தூண்டியிருக்கிறது. இவர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோருக்கு செய்த சமூக பணியினை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. சீதாலட்சுமி ஐ.ஏ.எஸ் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.8 ஏக்கர் விவசாய நிலத்திற்கு இயற்கை விவசாயம் செய்ய ஏதுவாக ரூ 50,000 மதிப்பில் இரண்டு ஆழ்துளை கிணறுகளை விவசாயிகளுக்கு அமைத்து கொடுத்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நற்பணிகளும், 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணமும் செலுத்தியுள்ளனர்அகில உலக தமிழ் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையை பாராட்டி இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.இவர் சிறந்த அறக்கட்டளைக்கான விருது மற்றும் 10,000 ரூபாய் பரிசு பெற்றுள்ளார். மேலும் சோஷியல் புரொடக்ஷன் அமைப்பின் சர்வதேச சாதனையாளர் விருது.
அப்துல்கலாம் விருது,கலாம் இலட்சிய விருது, விஷன் 2020 விருது, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ விருது, மற்றும் சேவ ரத்னா விருது உள்ளிட்ட சாதனைக்கு சொந்தகாரர் ஆவார்.கல்வி, விவசாயம் ஆகியவற்றுக்கு உதவுவதே எதிர்கால இலட்சியமாக கொண்டவர். கொரோனா நிதி, மற்றும் அடிப்படை வாழ்வாதார உதவிகள் என தொடர்ந்து செயல்படும் இவரது மனித நேய பணிகளுக்காக இரண்டாவது முறை கௌரவ டாக்டர் பட்டம் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பணிகள் மேலும் சிறக்கவும், இவரது கனவுகள் மெய்படவும் யுகம் நியூஸ் சார்பில் வாழ்த்தி மகிழ்வோம்.