சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரத சிக்ஸா ரத்னா டாக்டர் ரஜினி மற்றும் டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில்
மாம்பலம் யூத் கிளப் என்கிற பெயரில் கடந்த 50 ஆண்டுகளாக பாக்சிங்,சிலம்பம்,யோகா,தியானம்,குண்டலனியோகா,ஆன்மீகம் போன்றவைகளை இலவசமாக பயிற்றுவித்து வரும் மகா குரு கே. ஜெயபால் அவர்களின் சேவையை பாராட்டி
Global human peace universit y(virtual institute) என்கிற அமைப்பு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி
கௌவுரப்படுத்தியது.