சென்னை :ஆக,29
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணியில் திமுக எம்.பி. ம்ற்றும் எம்.எல்.ஏ.களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிகுட்பட்ட பட்டேல் நகரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்ட களப்பணியாளர்களுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கலந்துரையாடினார்,
அதைத்தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் வழங்கிய 40 ஆயிரம் முகக்கவசங்களை அமைச்சர் பாண்டியராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார்,

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தியாவிலேயே அதிகளவிலான மருத்துவ பரிசோதனைகளை தமிழகம் தான் மேற்கொண்டிருக்கிறது, தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிகளவிலான நோய்த்தொற்று உடையவர்களை குணப்படுத்தியிருக்கிறோம். தண்டையார்பேட்டை மண்டலத்தை பொறுத்தவரை 92 சதவீத நோய்த்தொற்றை விழிப்புணர்வு மூலம் குணப்படுத்தியிருக்கிறோம், அவர்களை மீட்டு காப்பாற்றியிருக்கிறோம், இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதேபோல நோய்த்தொற்று உடையவர்களை கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், நோய்த்தொற்று உடையவர்களை 5 நாட்களுக்கு முன்பே அடையாளப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், 5 நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் சேர்ப்பீர்களானால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும், அதற்காக யாருக்கும் இவ்வளவு பேர் சேர்க்க வேண்டும் என்று இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.. ஒரு நாள் நள்ளிரவில் எனக்கு தொலைபேசி அழைப்பு, இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளியை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு களப்பணியாளர் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார். அந்த களப்பணியாளர் தெரிவித்ததன் மூலம் அந்த நோயாளி காப்பாற்றப்பட்டார், நான் அந்த தொலைபேசி அழைப்பால் நெகிழ்ந்து போனேன், கொரோனா நோயாளியை மருத்துவமனையில் சேர்த்ததுடன் தனது பணி முடிந்து விட்டதாக கருதாமல் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த களப்பணியாளர் பாராட்டத்தக்கவர்
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4 சதவீதம் தான் நோய்த்தொற்று இருந்தது, இப்போது அது 9 சதவீதமாக உயர்ந்து விட்டது, அதற்கு பல்வேறு காரணங்கள், இருக்கின்றன, இப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கிட்டதட்ட ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்கிறார்கள், அதனால் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது, இன்னும் சில நாட்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட இருக்கிறது, ரயில்களும் இயக்கப்பட இருக்கின்றன, இதனால் நோய்த்தொற்று அதிகரிக்கலாம், ஆனால் உயிரிழப்பு என்பது இருக்கக்கூடாது. தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு மிக குறைவாக இருக்கிறது, இந்தியாவிலேயே உயிரிழப்பு விகிதாச்சாரத்தில் 1.4 சதவீதம் தான், சென்னையில் உயிரிழப்பு சதவீதம் 2 சதவீதமாக இருக்கிறது, அதை 1 சதவீதமாக குறைக்கவேண்டும்,

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் வடசென்னை திமுக எம்.பி.கலாநிதி வீராசாமியுடனும் பெரம்பூர் திமுக எம்.எல்.ஏ.வுடனும் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம், அவர்கள் எங்களுடன் பணியாற்றினால் வரவேற்க தயாராக இருக்கிறோம், அதே போல் தினகரன் வந்தாலும் வரவேற்போம், அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கிறாரா என்பது குறித்து நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது, ஆனால் ஆர்.கே.நகரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அந்த குறையே இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதிமுகவில் எம்ஜிஆரும் ஜெயலலிதா தொண்டர்களின் ரத்த நாளங்களாக இருக்கிறார்கள், அந்த குறையே இல்லாமல் இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் செயல்பட்டு வருகிறார்கள், எனவே ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் இல்லை என்ற குறை இல்லை . முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மருத்துவ நிபுணர்களுடனும் மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறார், பேருந்து போக்குவரத்து குறித்தும் படிப்படியாக தளர்வுகள் வழங்குவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை மேற்கொண்டு அறிவிப்பார், இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்,
இந்த நிகழ்ச்சியில் வடசென்னை வடகிழக்கு அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜனார்த்தனம் ஆகியோர் கலந்துகொண்டனர்,
