சென்னை :
ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்ற உறுப்பினரான திருநாவுக்கரசு அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ராஜீவ் காந்தி உலகத் தலைவராக திகழ்ந்தவர். பிரதமராக இருந்தபோது தொழில்நுட்பத்தை நாடு முழுதும் கொண்டு சென்றவர் என குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி தான் மீண்டும் தலைவராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்வும் அப்படி வந்தால் காங்கிரஸ் மேலும் எழுச்சி பெறும். மோடியை எதிர்க்கக்கூடிய தேசியக்கட்சியின் தலைவர், மோடிக்கு அச்சத்தை கொடுப்பவர் ராகுல் காந்தி தான்.
மதுக்கடைகளை அவசரமாக திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இப்ப யார் விண்ணப்பித்தாலும் உடனடியாக இ பாஸ் கிடைத்து விடுகிறது. இ பாஸ் ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளார். அதை ஏற்று தமிழக அரசு ரத்து செய்ததை வரவேற்கிறேன்.
அதே போல் பாதியளவு பேருந்துகளையும் அரசு இயக்கவேண்டும் பேருந்துகளை இயக்காமல் இருப்பது அரசுக்கும் நஷ்டம்தான் என தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கான சான்றிதழ்களை காலவரையின்றி செல்லுபடியாகும் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் முன்வைத்தார்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபொழுது திருச்சியை இரண்டாம் தலைநகர் ஆக்கவேண்டும் என முடிவு செய்தார். தற்போது மதுரையை இரண்டாம் தலைநகரமாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஆனால் அவ்வாறு செய்தால் திருச்சியை இரண்டாம் தலைநகர் ஆக்கவேண்டும் தமிழ்நாட்டிற்கு மையப் பகுதியாக விளங்குவதால் அனைத்துமே வசதியாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
