சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம். 21 ஜூன் 2021 அன்று

“காதலர் உரையாடல்” – திரைப்பட பாடல்கள் குறித்து பாடலாசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் பங்கேற்பில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற இருக்கின்றது

பாட்டெழுதுறது ரொம்ப சவாலான ஒரு விசயம், ஜாலியான அனுபவம். பாட்டெழுதுறவங்க மனசுக்குள்ளயும் மூளைக்குள்ளயும் தொடர்ந்து ஒரு ரிசர்ச் நடந்துட்டே இருக்கும். எதைப் பாத்தாலும் இதைப் பாட்டுல வைக்கலாமான்னு ஒரு யோசனை ஓடும். பாடலாசிரியனாக இருப்பது ஒரு பேரனுபவம்.

பாட்டெழுதுவது பற்றி கேட்டபோது பாடலாசிரியரும் எழுத்தாளருமான முருகன் மந்திரம்இப்படி கூறுகிறார்.

“உ” படத்தில் திக்கித்தெணறுது தேவதை, “எம்.ஜி.ஆர் மகன்” படத்தில் ஏறெடுத்து பாக்காம உள்பட 70க்கும் மேற்பட்ட பாடல்களையும், “ஆபரேசன் அரபைமா”, “உங்களைப் போடணும் சார்”, “பௌவ் வௌவ் – லேடி வித் எ டாக்” ஆகிய படங்களுக்கு வசனத்தையும் எழுதி இருக்கும் முருகன் மந்திரம், இன்னொரு பக்கம், “இளையராஜா கதைகள்”, “ரதி நதி”, “ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டரின் அனுபவங்கள்”, “திகட்ட திகட்ட காதல் செய்” போன்ற புத்தகங்களை எழுதி எழுத்திலும் அசத்துகிறார்.

தமிழ் திரையுலக வரலாற்றில் அரியதோர் செயலாக, முதல் முயற்சியாக, “10 நாட்களில் பாடலாசிரியர்” எனும் இணையவழி பயிற்சி வகுப்பையும் கடந்த 2021 மே மாதத்தில் இருந்து நடத்துகிறார். மிகவும் குறைந்த கட்டணத்தில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் உலகமெங்கும் இருந்து இதுவரை 40க்கு மேற்பட்டோர் பயிற்சி பெற்று தத்தகார நுட்பத்தை தெரிந்துகொண்டு மெட்டுக்கு பாட்டெழுத கற்றுக்கொண்ட சந்தோஷத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

பாடலாசிரியராக, எழுத்தாளராக, அசோஸியேட் டைரக்டராக, வசனகர்த்தாவாக, ஆசிரியராக, பல்துறைகளில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் முருகன் மந்திரம் வரும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு, “தமிழ் திரைப்பட பாடல்களில் காதலர் உரையாடல்” என்ற தலைப்பில் சுவாரஸ்யமானதொரு உரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்வின் தலைவர்களாக சென்னைப் பல்கலைக்கழக IDE இயக்குநர் பேரா.கு.ரவிச்சந்திரன் அவர்களும் அமெரிக்கா
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நிறுவனர் திரு. ஆஸ்டின் கில்டஸ் அவர்களும் சுவிட்சர்லாந்து, ஜெனிவா, ஜெனீவா கலை இலக்கியப் பேரவை, நிறுவனர்
திரு. க. அருந்தவராஜா அவர்களும் அபுதாபி, தமிழ்நிலம் அறக்கட்டளை,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் கீதா ஸ்ரீராம் அவர்களும் தலைமை ஏற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகையின் பேராசிரியர்
முனைவர் கி.சங்கர நாராயணன் அவர்களும் தமிழ்நிலம் அறக்கட்டளை, இயக்குநர், திருத்தங்கல் நாடார் கல்லூரி, தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர்
முனைவர் ஜோ.சம்பத்குமார் அவர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளனர். பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.

(மேலும் விவரங்களுக்கு:
தமிழ் நிலம் அறக்கட்டளை நிறுவனர்
பேராசிரியர் முனைவர். ஜோ.சம்பத்குமார்
செல் : 0091 99760 25731)