சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பு சார்பில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்,குடும்ப பெண்கள்,விதவைகள்,மாற்றுத்திறனாளிகள்,முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் தீருவல்லிக்கேணி பகுதியில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின் நிர்வாகி கபூர்,அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.எம். இதாயத்துல்லா,தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரவை ஒருங்கிணைப்பாளார் குலாம் தஸ்தகீர் உள்ளிட்ட ஏராளமான மஸ்ஜித் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்
