சென்னை : ஆக,15
மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 74-வது சுதந்திர தின விழா கூட்டம் தி.நகர் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள மருத்துவர். அரிமா சிவபிரசாத் அவர்களின் கிளினிக்கில் நடைபெற்றது.

இந்தகூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஸ்டான்லி மருத்துவமனையின் அசிஸ்டன்ட் ப்ரொபசர் மருத்துவர் கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக மக்கள் கொரோனா தொற்று பற்றி தங்களது பயத்தினை முதலில் நீக்க வேண்டும். பயம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பாதியாக குறைத்து விடும் என்ற தகவலை பதிவிட்டார்.
மேலும் மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் அவருக்கு பொன்னாடை அணிவித்து கோவிட் வாரியர் என்ற பதகத்தை அளித்து அவரை கௌரவித்தது.

அதேபோல் மருத்துவர்.அரிமா சிவபிரசாத் அவர்கள் கொரோனா தொற்று பதட்டத்தில் இருக்கும் சூழ்நிலையிலும் தனது கிளினிக்கை தொடர்ச்சியாக திறந்து மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார். இந்த சேவைக்காக அவருக்கும் கோவிட் வாரியர் பதக்கம் வழங்கப்பட்டது.

