மயிலாப்பூர் : ஆக, 15
மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர், வி.பி கோவில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மேலும் அந்தப் பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக பணிபுரிந்து வரும் களபணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

மேலும் அவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கொடியேற்றி சிறப்புரையாற்றிய அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா நந்தகுமார் அவர்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்த இந்த 74-வது சுதந்திர தினவிழா கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் இன்றி கொண்டாடப்படுவது சற்று வருத்தமாக உள்ளது.இருப்பினும் இனிவரும் காலங்கள் சிறப்பாகவும், இயல்பாகவும் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.