சென்னை : கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு சட்டத்தை தற்போது 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்துள்ளது. நேற்று தன்னார்வலர்கள் சேவையாற்ற தடை என்ற அரசின் அறிவிப்பால் நேற்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தன்னார்வலரும், மனித உரிமைகள் சார்ந்து இயங்குபவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்களை தொடர்புக்கொண்டு இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது, புகைப்படம் எடுப்பதாக முதல் சர்ச்சை எழுப்பப்பட்டது,அந்த சர்ச்சைக்குபின் முகங்கள் மறைத்து புகைபடங்கள் வெளியிடப்பட்டன.
அடுத்து தன்னார்வலர்கள் தன்னிச்சையாக செயல்பட தடை என அறிவிக்கப்பட்டது.
தற்போது வெளியிட்டுள்ள தகவல்களின் படி அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தங்கள் பகுதியில் சமூக சேவை செய்யலாம் என செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளனர். முன்பு வெளியிட்ட அறிவிப்பிலுள்ள விதிமுறைகளைதான் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பை மீண்டும் சாதகமாக எடுத்துக்கொண்டு எந்த வரம்பு மீறலுக்கும் காரணமாகிவிடகூடாது. இந்த அறிவிப்பினை கள பணியில் இருப்போர் மீண்டும் அதை ஒரு முறை படித்து புரிந்துகொண்டு களபணியாற்றுங்கள். ஒருவர் செய்யும் தவறால் மற்றவர்களுக்கு பாதிப்பு நேரகூடாது. இது ஆறுதலான விஷயம் நம் பகுதியில் நாம் விரும்பும் மக்களுக்கு உதவி செய்யமுடியும் என அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.தனித்திருப்போம், வீட்டிலிருப்போம் தனி மனித விலகலுக்குட்பட்டும், ஊரடங்கு சட்டத்திற்கு உட்பட்டும் உதவ முற்படுவோம். அப்போதுதான் நாமும் தொடர்ந்து இயங்க முடியும் என சோஷியல் புரோடக்ஷன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் தெரிவித்தார்.