சென்னை : தற்போது கொரோனா தொற்று பாதிப்பினால் அநேக மக்கள் வாழ்வில் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கின்றார்கள் அதுவும் அன்றாடம் வேலை செய்தால் தான் அந்நாளில் அவர்களின் வயிற்றின் வேதனைகளை போக்க முடியும்.

ஆனால் இந்த கொலவெறியோடு உலகம் முழுவதும் சுற்றி திரியும் கொரோனாவின் பிடியில் தப்பிக்க அரசு வெளியே வராதீர்கள் என்று சட்டத்தை சில காலத்திற்கு அமல்படுத்தி உள்ளனர்.

ஆனால் கொரோனாவின் கொடுமையை விட பசியின் கொடுமையை எப்படி சமாளிப்பேன் என்று சொல்ல முடியாத ஏழை, எளிய மக்களின் அழுகைகளையும் . ஏக்கங்களையும் போக்க ISWOT என்கின்ற (Indian seafarers welfare Organization.) இந்திய மாலுமிகள் நல அமைப்பின் சார்பில் Chaiman Dr.A.பாபு மைலன் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் தமிழகம் பாண்டிச்சேரி மற்றும் சில மாநிலங்களில் உள்ள கிராமங்களில் மாலுமிகள் மூலம் மீனவர்களுக்கு தன்னால் முடிந்த அளவிலும், சில தன்னார்வலர்கள் மூலமும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை இந்த அமைப்பு போக்கி வருகின்றது.

