சென்னை:ராமாபுரத்திலுள்ள பக்தி வேதாந்தா அவென்யூ குடியிருப்போர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தூய்மை பணிகளை அன்றாடம் செய்து சிறந்த பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்கள்..

அவர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.. சமத்துவம் தான் உண்மையான சுதந்திரம் என்னும் கருத்தியல் அடிப்படையில் முதல் முறையாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் வெகுவாக பாராட்டினர்.