சேப்பாக்கம்:அ. இ. அ. தி. மு. க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில்  கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள்  முதல் சந்திப்பு நிகழ்ச்சி  மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர்.எம்.வீ.சதீஷ் அவர்கள் தலைமையில் சேப்பாக்கம் ஆல மரத்து விநாயகர் கோவில் அருகில் நடைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் சதீஷ் அவர்கள் சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகளுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடி ஆலோசனை வழங்கினார்.

இதில் திரளான நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.