காரைக்குடி:
சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கம், காரைக்குடி ஓவியம் அரிமா சங்கமும் இணைந்து காரைக்குடி ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண்தான விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த முகாமினை ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை பொறுப்பு A.சிலம்பு செல்வி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் நாட்டுநலத்திட்டப்பணி திட்ட அலுவலர் A.ரேணுகா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அரிமா மாவட்ட அமைச்சரவை பொருளாளர் அரிமா P.R.மருதப்பன் அவர்களும், District GMT Co-ordinator அரிமா.R.அழகுசுந்தரம் அவர்களும், அரிமா மண்டலத்தலைவர் அரிமா.R.சித்தார்தன் அவர்களும், அரிமா வட்டாரத்தலைவர் அரிமா.A.சார்லஸ் ஜோசப் அவர்களும் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் முன்னிலை வகித்தனர்

சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்ன் நிறுவனத்தலைவரும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க பட்டயத்தலைவரும், கண்தான மாவட்டத் தலைவரும் உலக சாதனையாளருமான அரிமா Dr.J.கணேஷ் MJF அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கண்தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. கண்தான மாவட்டத் தலைவர் அரிமா Dr.J.கணேஷ் M.JF அவர்கள் கூறுகையில்: அகத்துக்கு அழகு
அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு. கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம் இத்தகைய இருண்ட உலகில் வாழ்பவர்களுக்கு ஒளி விளக்காக கிடைத்ததுதான் கண்தானம். மனிதர்களுக்கு மரணம் உண்டு. ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை. எனவே மரணத்திற்கு பின் அனைவரும் கண்தானம் செய்யலாம். கண்ணின் கருவிழியின் பாதிப்பால் ஏறக்குறைய 68 லட்சம் இந்தியர் முற்றிலும் கண் ஒளி இழந்துள்ளனர். மறைந்தவர் தானமாக அளிக்கும் கண்களைக் கொண்டு இவர்களின் பெரும்பாலோரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். ஆனால் நாம் ஆண்டுதோறும் பெரும் கருவிழிகளோ சில ஆயிரங்களோ. சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார். ஒருவர் கண்தானம் வழங்கிளால் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும் என்றும் கூறினார். கண்தானத்திற்கு பதிந்து வைக்க தேவையில்லை என்றும் உறவினர்கள் சம்மதம் இருந்தால் கண்தானம் வழங்கலாம் கண்தானம் பெறுவதில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு மாணவ – மாணவிகளின் பங்கு அதிகமாக உள்ளது என்று கூறினார்.

கண்தான விழிப்புணர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பங்கு பெற்ற மாணவிகள் அனைவருக்கும் கண்தான விழிப்புணர்வு நோட்டீஸ்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த முகாமிற்கு ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலத்திட்டப்பணி திட்ட அலுவலர் P. பாண்டி மீனா அவர்கள் நன்றியுரை கூறினார்.