பெங்களுர்:அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறையில் சாதனை புரிந்த பள்ளி ஆசிரியர் மற்றும் பேராசிரிய மேன்மக்களுக்கு குரு சம்மன் என்கிற விருது வழங்கும் நிகழ்வு பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் வித்யா மற்றும் முனைவர் சிவா விஜயகுமார் ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டிற்கான உயர்ந்த விருதான குரு சம்மன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
