ஈரோடு:கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் அரங்கில் டாக்டர் ஆர். சிவக்குமார், ஜபிஎஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இவ் விழாவில் கலந்துகொண்டமருத்துவர் லயன் ஜே. கணேஷ் அவர்கள் கண் தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களைப் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்ற வகையில் பகிர்ந்துக் கொண்டார். கண்ணொளி தருவோம் அறக்கட்டளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், 110 ஜோடி கண்களைத் தானம் அளித்த குடும்பத்தினரும், இத்தானங்களைச் சாத்தியமாக்க உதவியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் விழாவில் பேசிய மருத்துவர் கணேஷ் அவர்கள் இந்த அறக்கட்டளையின் தலைவர் திரு. ஆர். வித்யாசாகர் அவர்களுக்கும், ஈரோடு அரசன் கண் மருத்துவமனையின் உறுப்பினர்களுக்கும், இவ்விழாவில் கலந்துகொண்ட அனைத்து நல்மனம் கொண்டவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
