திருச்சி: தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினவிழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் தலைவர் மற்றும் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் நிறுவனத் தலைவர் வழக் கறிஞர் பி.ரமேஷ்பாபு அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட அமர்வு மற்றும் மகிளா மாவட்ட நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஆர். டி. சந்தோசம், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் டி. கே. லில்லி கிரேஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை யாற்றினர்.

சிறப்பு பாளர்களாக மனித நேய திலகம் ஒசூர் மருத்துவமனை மருத்துவ பணியாளர் முனைவர் வி .கண்ணகி,ஓய்வு பெற்ற ஆசிரியர் திருவண்ணாமலை பா. ரவிச்சந்திரன்,
ஆசிரியர் மீமிசல் பூ.தமிழ்ச்செல்வன், கவிஞர் மற்றும் தலைமை ஆசிரியர் புதுக்கோட்டை மா. மல்லிகா, ஆசிரியர் பயிற்றுனர்கள் விழுப்புரம் ஆ. ஸ்ரீமுல்லை,
விழுப்புரம் து.பாரதி, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற
புதுக்கோட்டை சி. சோபா, பேராசிரியர், முனைவர் சேலம் வ.ஆறுமுகம், ஆசிரியை மதுரை ஆ. ஒலிவா சாந்த சீலி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் ஆசிரியை முனைவர் மதுரை ம. மு.ரா.கீதா ராணி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.