திருவல்லிக்கேணி :
கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் யுனானி மூலிகை பவுடர் வீடு மற்றும் கடைகளில் வழங்கும் நிகழ்ச்சி திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலை பகுதிகளில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் மற்றும் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மற்றும் யுனானி டாக்டர்.முகமது உபைதுல்லா பேக் பொது மக்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் முக கவசம் மற்றும் யுனானி மூலிகை பவுடர்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.