மறைமலை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கொரோனா தொற்றுநோய் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிப்பு
சென்னை:
தாம்பரம் அடுத்த மறைமலைநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் கொரோனா தொற்றுநோய் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயனைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரதுறை ஊழியர்கள் இணைந்து திருகட்ச்சூர் அருகில் உள்ள வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் மேலப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், பாவேந்தர்சாலை, கம்பர் சாலை, திருவள்ளுர் சாலை, எம்ஜிஆர் சாலை போன்ற பகுதிகளுக்கு சென்று கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக வீதிவீதியாக சென்று கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டும், பொதுமக்களை வீட்டியிலேயே தங்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் சுகாதாரதுறை ஆய்வாளர் சிவமுருகன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரதுறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்..
