சென்னை:பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவை சார்பில் கொரோனா தொற்று காரணமாக பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மலரஞ்சலி செலுத்தப் பட்டது.

இந்த இரங்கல் நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவையின் தலைவர் என்.ஆர் .தனபாலன் அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
மேலும் நிர்வாகிகளான மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம். வைகுண்டராஜா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

