மயிலாப்பூர் : அக்,27

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் சாய்பாபாவின் 102 வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைப்பெற்றது.

இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியே சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த ஆலய அறக்கட்டளை‌ நிர்வாகி கூறியதாவது:
சாய்பாபாவின் 102 வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை சிறப்பாக நடைப்பெற்றதாகவும், கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை வந்த உண்டியல் பணத்திலிருந்து வாங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கச்சங்கிலியை சாய்பாபாவுக்கு அணிவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த தாகவும் தெரிவித்தார்.

எஸ்.ஏ.ராஜ்குமார்

(செய்தியாளர்)

96 77 34 91 96