சென்னை :2016 – ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ‘ நீட் ‘ இல்லாமல் சிறப்பாக படிப்பை நிறைவு செய்து சிறந்தவர்கள் என நிரூபித்துவிட்டீர்கள் என்று பேசினார்.

எம்.பி.பி.எஸ் . , பி.டி.எஸ் . போன்ற மருத்துவப் படிப்பு களில் சேருவதற்கு’நீட்’தேர்வு மதிப்பெண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது . அதன்படி , 2016 – ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட்ட தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இதில் தமிழகத்துக்கு மட்டும் அந்த ஆண்டில் விலக்கு பெறப்பட்டது . அதற்கு அடுத்த ஆண்டில் ( 2017 ) இருந்து நீட் தேர்வு மதிப்பெண்ணை கொண்டே தற்போது வரை தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை நடக்கிறது அந்த வகையில் , 2016 – ம் ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமல் , 12 – ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் படிப்பு நிறைவு விழா , அவர்களுக்கு பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில் நடந்தது .இந்த பட்டமளிப்பு விழாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் .

இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர்.நாராயண பாபு , சென்னை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
மேலும் இவ்விழாவில் 2016 – ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பை நிறைவு செய்த மாணவ – மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் , படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன . இதில் பிரசாந்த் என்ற மாணவர் அனைத்து வகையிலும் சிறந்த மாணவர் என்ற அடிப்படையில் , மொத்தமாக வழங்கப்பட்ட 42 பதக்கங்களில் , 36 பதக்கங்களை அந்த மாணவரே தட்டிச் சென்றார்.அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் . மாணவனின் தாயாரை மேடைக்கு அழைத்து , மகனுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்க வாய்ப்பு கொடுத்தார் .

முன்னதாக இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது : இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் பூனியன் பிரதேசங்களில் 578 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன . இதில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்பட 70 மருத்து வக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கிறது . உலகில் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 100 இடத்தில் 60 – வது இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளது . இந்த மருத்துவக் கல்லூரிக்கு ஏராள மான சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது . அந்தவகையில் மிக விரைவில் உலகில் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் தர வரிசை பட்டியலில் ஓரிலக்கத்திற்க்கு வரும் வகையில் கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்று பேசினார் .