சென்னை:மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் “EMPLOYIFIED” 22303 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டதைப் பாராட்டி நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களான PURPLE DRIVE TECHNOLOGIES நிறுவனர் சுந்தர் சேத், BANK OF NEWYORK, MELLON TECHNOLOGY துணைத் தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன், CLUSTREX DATA PVT LTD நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. வெங்கடரமணி ஆகியோரும் இணைச் செயலர் பி.ஹேமந்த் சோர்டியா,நிர்வாக உறுப்பினர் பனாலால் ,முதல்வர்.வெங்கடரமணன் ஆகியோரும் பேராசிரியர்களும் இணைந்து குத்து விளக்கேற்றிட விழா இனிதே தொடங்கியது.

கல்லூரி முதல்வர் வெங்கடரமணன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து கல்லூரியைப் பற்றிய காணொளியும் பணியமர்த்தப்பட்ட மாணவர்கள் தங்களின் பணி வாய்ப்புக்கு உறுதுணையாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் உரை அடங்கிய காணொளியும் ஒளிபரப்பப்பட்டது.

பேராசிரியர் ரோகித் சாய் ஸ்ரீ சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து இணைச் செயலர் பி. ஹேமந்த் சோர்டியா
PURPLE DRIVE TECHNOLOGIES நிறுவனர் சுந்தர் சேத், அவர்களுக்கும்
நிர்வாக உறுப்பினர் பனாலால் BANK OF NEWYORK, MELLON TECHNOLOGY துணைத் தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன், முதல்வர்.வெங்கடரமணன் , CLUSTREX DATA PVT LTD நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி. வெங்கடரமணி பொன்னாடை, பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பெருமைப்படுத்தினர்

அதனையடுத்து சிறப்பு விருந்தினர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினர்.