நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் உள்ள ரியல் என்க்ளேவ் என்கிற வணிக கட்டிடத்தில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை கடந்த 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை , கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நலிந்த. எளிய பொது மக்கள் மற்றும் முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது, பெண்கள் முதியோர் காப்பகத்திற்கு தேவையான உதவிகள் செய்வது போன்ற உதவிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக கன்னிகாபுரம், தாஸ் நகரை சேர்ந்த
வசந்தி அவர்களின் மகள் ஆர்யாவின் திருமண உதவித் தொகையாக ரூ.20000 மற்றும் செந்நீர் குப்பத்தை சேர்ந்த சுமதி என்பவரின் மருத்துவ உதவி தொகையாக ரூ.10,000 சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர்
சுதா சுகுமார் அவர்களால் வழங்கப்பட்டது….
மேலும் உதவி பெற விரும்புவோர் #BalakrishnanFoundation என்கிற முகநூல் பக்கத்தில் பதிவு செய்யவும்

